உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு மாநில முதல்வருக்கு வியாபாரிகள் மனு

கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு மாநில முதல்வருக்கு வியாபாரிகள் மனு

பந்தலூர்;'பந்தலுாரில் பயனற்ற நிலையில் உள்ள 'வாட்டர்' ஏ.டி.எம்.,களை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பந்தலுார் வியாபாரிகள் நல சங்கம் சார்பில், தலைவர் அஷ்ரப், செயலாளர் ஆண்டனி, பொருளாளர் காளிமுத்து ஆகியோர் இணைந்து முதல்வருக்கு அனுப்பி உள்ள மனு:பந்தலுார் பஜாரில் கால்நடைகள் சாலையில் உலா வருவதால், வாகன விபத்து மற்றும் பல்வேறு பிரச்னைகள் தொடர்கிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது.பஜாரில் வாட்டர் ஏ.டி.எம்., கடைகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டு, பயன்பாடு இன்றி உள்ளது. கடைகள் மறைக்கப்பட்டு வியாபாரிகள் பாதிக்கப்படுவதுடன், வாகன ஓட்டுனர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதனை அகற்ற வேண்டும்.பந்தலுார் பஜார் பகுதியை துாய்மை நகராக மாற்றம் செய்ய பலமுறை வலியுறுத்தியும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாத குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மக்களுடன் முதல்வர் மற்றும் ஜமாபந்தி உள்ளிட்ட பல்வேறு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் சங்க கூட்டம் நடத்தி, கடையடைப்பு மற்றும் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை