உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பதவி முடியும் போது வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு

பதவி முடியும் போது வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி வகுப்பு

அன்னூர்;கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு வரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்னூர் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்களுக்கு நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகளை உள்ளூர் அளவில் அடைதல் என்பது குறித்த இரண்டு நாள் பயிற்சி வருகிற 22ம் தேதி துவங்குகிறது.அக்கரை செங்கப்பள்ளி, ஆம்போதி, கனுவக்கரை, குப்பனூர், அ.மேட்டுப்பாளையம், அல்லப்பாளையம், பசூர் ஆகிய ஏழு ஊராட்சிகளைச் சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 22, 23 தேதிகளில் பயிற்சி வகுப்பு நடக்கிறது.இதற்கு முன்பு பயிற்சியில் கலந்த கொள்ளாத வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெறுகிறது. கஞ்சப்பள்ளி, வடக்கலூர், ஒட்டர்பாளையம், காரே கவுண்டன்பாளையம், நாரணாபுரம், பச்சாபாளையம், குன்னத்தூர் ஆகிய ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, 24 மற்றும் 25ம் தேதி பயிற்சி வகுப்பு நடக்கிறது.மீதமுள்ள ஏழு ஊராட்சிகளை சேர்ந்த 30 வார்டு உறுப்பினர்களுக்கு, 29 மற்றும் 30ம் தேதி பயிற்சி நடக்கிறது. இதுகுறித்து வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், 'வருகிற டிசம்பர் மாதத்துடன் எங்களது பதவிக்காலம் முடிகிறது. தேர்தல் அறிவிப்பு நவம்பரில் வந்து விடும். நான்கு மாதங்கள் மட்டுமே இன்னும் உள்ளது. தற்போது வழங்கப்படும் பயிற்சி எவ்வளவு உபயோகமாக இருக்கும் என்று தெரியவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை