உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி

மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் பெண் விவசாயிகளுக்கு பயிற்சி

கூடலுார் : கூடலுார் தேவாலாவில் மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்பது குறித்து பெண் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.கூடலுார் தோட்டக்கலை மற்றும் வேளாண்மை தொழில்நுட்பம் வேளாண்மை முகமை திட்டத்தின் கீழ், தேவாலாவில் பெண் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. தொழில்நுட்ப மேலாளர் யமுனப்பிரியா வரவேற்றார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ''பெண்கள் ஓய்வு நேரத்தில், சிறு தொழில் செய்து குடும்பத்தின் வருமானத்தை இரட்டிப்பாக வேண்டும். இதற்காக பெண்கள் சுய தொழிலை கற்றுக் கொள்ள வேண்டும்; இப்பயிற்சி முகாம் உதவியாக இருக்கும்,'' என்றார்.தொடர்ந்து, பெண்கள் சுய தொழில் செய்யும் வகையில், சிப்பி காளான் வளர்த்தல், பழங்களை கொண்டு மதிப்புக்கு கூட்டு பொருள் தயாரித்தல் குறித்து முன்னோடி விவசாயி உதயகுமார் பயிற்சி அளித்தார். முகாமில், தோட்டக்கலை அலுவலர் பிரியங்கா, பெண் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி