உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

குன்னுார் : குன்னுார் வெலிங்டன் ராணுவ போர் நினைவு சதுக்கத்தில், நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், நாகேஷ் சதுக்கத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், எம்.ஆர்.சி., கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் தேசிய கொடியேற்றி, ராணுவ பயிற்சி கல்லுாரி அருகே உள்ள போர் நினைவு சதுக்கத்தில், அஞ்சலி செலுத்தினார். நாட்டிற்காக தங்களது உயிரை தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ராணுவ வளாக பகுதிகளில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ராணுவ வீரர்கள், அதிகாரிகள் பங்கேற்ற சுதந்திர தின விழிப்புணர்வு ஓட்டம் பேரக்ஸ் முதல் குன்னூர் வரை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை