மேலும் செய்திகள்
பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
15 hour(s) ago
வீட்டை இடித்த யானைகள்; வனத்துறையினர் ஆய்வு
15 hour(s) ago
அணைகள் நீர்மட்டம்
15 hour(s) ago
தென் மாநில தேயிலை ஏலங்களில் சரிவு
15 hour(s) ago
ஊட்டி: தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சீர் மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு, 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி உதவித்தொகை, இயற்கை மரணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குக் கண்ணாடி செலவை ஈடு செய்வது மற்றும் முதியோருக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித் தொகைகள் பெற, 18 முதல், 60 வயதுவரை உள்ள, அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாதவர்கள், வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உறுப்பினராக பதிவு செய்தவர்கள் விரைவில் பதிவை புதுப்பித்து கொள்ளவேண்டும். கூடுதல் தகவல் பெறுவோர், மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago