மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
பந்தலுார் : பந்தலுாரில் வெளுத்து வாங்கிய மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். மேலும், மழையின் காரணமாக வயல்வெளிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து, சாலை மற்றும் நடைபாதைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. பொன்னானி, சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளை ஒட்டிய தேயிலை தோட்டகளில் ஆற்று வெள்ளம் சூழ்ந்ததால் கிராமப்புற மக்கள் நடந்து செல்வதில் சிரமப்பட்டனர். மேலும் கரிய சோலை பகுதியில் அரசு பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டிருந்த தடுப்பு சுவர் இடிந்து, ஒருவர் வீட்டின் மீது விழுந்தது.பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் வாசுதேவன், வி.ஏ.ஓ. அசோக்குமார் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரில் ஆய்வு மேற்கொண்டு, கரையோர மக்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025