மேலும் செய்திகள்
ராணுவ போர் தளவாட பொருட்களுக்கு ஆயுத பூஜை
02-Oct-2025
கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்
02-Oct-2025
காமராஜர் சதுக்கத்தில் காந்தி ஜெயந்தி விழா
02-Oct-2025
மஞ்சூர்:மஞ்சூரில் குந்தா மண்டல் பா.ஜ., சார்பில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு ராமர் கோவில் அட்சதை வழங்கப்பட்டது.உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது. வரும், 22 ம் தேதி கும்பாபிேஷகம் நடக்கிறது. இதையொட்டி ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதை மற்றும் கோவில் படம், கும்பாபிேஷகம் அழைப்பிதழ் ஆகியவற்றை அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று பா.ஜ., சார்பில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குந்தா மண்டல் தலைவர் ரமேஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள், குந்தா பகுதி வீடுகளில், 10 ஆயிரம் அட்சதையை வினியோகித்துள்ளனர். மேலும், இம்மாதம், 22 ம் தேதி மதியம், 12:00 மணிக்கு வீடுகள், கோவில்களில் ராமநாம ஜபம் செய்யவும், அன்று மாலை, வீட்டு வாசல்களில் கார்த்திகை தீபங்கள் ஏற்றவும் வலியுறுத்தினர். குந்தா மண்டல்தலைவர் ரமேஷ் கூறுகையில், '' குந்தா மண்டலத்தில், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு ராமர் கோவிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான பணியை நிறைவு செய்துள்ளோம்.'' என்றார்.
02-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025