மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
குன்னுார்:குன்னுார் தேயிலை ஏலத்தில், ஒரே வாரத்தில், 2.79 லட்சம் கிலோ வரத்து குறைந்ததுடன், விற்பனை, 2 சதவீதம் சரிந்தது. குன்னுார் தேயிலை ஏல மையத்தில், நடப்பாண்டின், 8வது தேயிலை ஏலம் நடந்தது. அதில்,'11.13 லட்சம் கிலோ இலை ரகம்; 2.99 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம் 14.12 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்திற்கு வந்தது. அதில், '9.68 லட்சம் கிலோ இலை ரகம்; 2.65 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, 12.33 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்றது. 87.32 சதவீத தேயிலை தூள் விற்பனையான நிலையில் சராசரி விலை கிலோவுக்கு, 94.73 ரூபாயாக இருந்தது. 11.68 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. 'டஸ்ட்' ரகம் சராசரி விலை, 97.48 எனவும், இலை ரகம், 90.92 ரூபாய் எனவும் இருந்தது. கடந்த, 7வது ஏலத்தை விட, 2.79 லட்சம் கிலோ வரத்து குறைந்ததுடன், 2 சதவீதம் விற்பனையும் குறைந்தது. கடந்த ஆண்டு, 8வது ஏலத்தில், 11.83 லட்சம் கிலோ தேயிலை துாள் வரத்து இருந்த நிலையில், 9.23 லட்சம் கிலோ தேயிலை துாள் விற்பனையாகி, 10.89 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்துள்ளது. சராசரி விலையாக கிலோவுக்கு, 117.95 ரூபாய் இருந்தது. நடப்பாண்டு சராசரி விலையில், 13 ரூபாய் வரை கிலோவுக்கு குறைந்துள்ளது.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025