| ADDED : பிப் 01, 2024 10:25 PM
கூடலுார்;கூடலுார் வட்டார போக்குவரத்து துறை சார்பில், ஜன., 15 முதல் ஒரு மாதம் சாலை பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் 'ஹெல்மெட்' அணிந்து பயணிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூடலூர் நகராட்சி அலுவலகம் அருகே துவங்கிய, இருசக்கர விழிப்புணர்வு ஊர்வலத்தை, ஆர்.டி.ஓ., முகமது குதரதுல்லா, கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் துவக்கி வைத்தனர்.ஊர்வலம், ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் வரையும்,கோழிக்கோடு சாலை நந்தட்டி வரையும் சென்று பழைய பஸ் ஸ்டாண்டில் நிறைவு பெற்றது. அங்கு நடந்த கூட்டத்தில், சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.ஊர்வலத்தில், போலீசார், கூடலுார் வேலி ரோட்டரி கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.