உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தூக்கத்தை கெடுக்கும் ஆபத்தான கற்பூர மரங்கள்

தூக்கத்தை கெடுக்கும் ஆபத்தான கற்பூர மரங்கள்

குன்னூர் : பேரட்டி இந்திரா நகர், மேல் பாரத் நகரில் விழும் நிலையில் உள்ள கற்பூர மரங்களை அகற்ற 5 ஆண்டாக மனுப்போர் நடத்தியும் பலன் இல்லாததால், போராட்டம் நடத்த மக்கள் தயாராகி வருகின்றனர். குன்னூர் அருகே பேரட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் உள்ள வீடுகளுக்கு இடையே பழமையான கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. அவை சாய்ந்த நிலையில் இருப்பதால், மழை, பலத்த காற்று வீசும் போது வீடுகளின் மீது விழும் நிலையுள்ளதால், இங்குள்ள மக்கள் பயந்து, பயந்து வாழ்ந்து வருகின்றனர். மரங்களை அகற்ற பேரட்டி ஊராட்சி சார்பில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர், குன்னூர் ஆர்.டி.ஓ., தாசில்தாருக்கு கடந்த ஐந்தாண்டாக பலமுறை மனு வழங்கியும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போன்று, மேல் பாரத் நகரில் வீடுகளுக்கு மேற்புற முள்ள பழமை வாய்ந்த கற்பூர மரங்களால், அங் குள்ள வீடுகளுக்கு எந்நேர மும் ஆபத்து ஏற்படும் சூழலில், அங்குள்ள கற்பூர மரங்களை அகற் றவும் பேரட்டி ஊராட்சி சார்பில் ஐந்தாண்டாக மனுப்போர் நடத்தப்பட் டது; அங்குள்ள மரங் களும் அகற்றப்ப டவில்லை. இதே நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை