உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் துவக்கம்

 ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் துவக்கம்

கூடலுார்: கூடலுார் வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும்பக்தர்களுக்காக இரும்புபாலம் விநாயகர் கோவிலில், ஐயப்பா சேவா சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சென்று வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள், நீலகிரி மாவட்டம், கூடலுார், குருவாயூர் வழியாக சபரிமலைக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்காக, கூடலுார் இரும்புபாலம் விநாயகர் கோவிலில், அகில பாரத ஐயப்ப சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான அன்னதானம் வழங்கும் திட்டம் கார்த்திகை, 1ம் தேதியான நேற்று துவங்கியது. அங்குள்ள அன்னதான மண்டபத்தில், ஐயப்ப பக்தர்கள், ஐயப்பனுக்கு பூஜை செய்து, அன்னதானம் திட்டத்தை துவங்கினர். இதனால், நான்கு மாவட்ட ஐயப்ப பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். நிர்வாகிகள் கூறுகையில்,'உள்ளூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன், அன்னதானம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டம், ஜன., மாதம் வரை நடைபெறும். மூன்று மாதம் நடக்கும் இத்திட்டத்திற்காக பக்தர்கள் உதவிபுரிய வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை