மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
ஊட்டி;'நீலகிரி ஓடைகளில், 2 லட்சம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊட்டியில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், 'பிரதம மந்திரி மீன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ்' மாவட்டத்தில் உள்ள ஓடைகளில் மீன் வளம் பெருகி மீனவர்கள் மீன் பிடிப்பை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் உயர வழி வகை செய்யப்பட்டது.அதன்படி, பைக்காரா ஓடை புனித் நகர்; டி.ஆர்.பஜார் ஓடை; கிளன்மார்கன் ஓடை ஆகிய பகுதிகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக, சாண்டிநல்லா வள்ளுவர் நகர் பகுதியில், 50 ஆயிரம் எண்ணிக்கையில் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் அணையில் இருப்பு செய்யும் திட்டம் துவக்கப்பட்டது.மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் தில்லைராஜன் கூறுகையில், ''நீலகிரியில், 10 க்கு மேற்பட்ட ஓடைகளில், 2 லட்சம் சாதா கெண்டை மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சாண்டிநல்லா அணையில், 50 ஆயிரம் எண்ணிக்கையில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டது. படிப்படியாக பிற ஓடைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு வைக்கப்படும்,'' என்றார்.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025