| ADDED : ஜன 09, 2024 10:34 PM
சூலூர்:சூலூர் அடுத்த காங்கயம்பாளையம் ஸ்ரீ ஐயப்பன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த, நவ., 17 ம்தேதி மண்டல மகர விளக்கு பூஜை துவங்கியது. அகண்ட நாம ஜபம், பறையெடுப்பு, நிறைமாலை, சுற்று விளக்கு பூஜை மற்றும் ஸ்ரீ ஐயப்பன் ஊர்வலம் ஆகியவை நடந்தன. செண்டை மேளம், நாட்டிய நிகழ்ச்சி, உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடந்தது. வரும், 15ம்தேதி மாலை, 6:30 மணிக்கு, நிறை மாலை, சுற்று விளக்கு, மகர சங்கரம பூஜையை அடுத்து மகர ஜோதி தரிசனம் நடக்கிறது. பஜனை மற்றும் அன்ன தானத்துக்கு பிறகு, திரிசூல சுந்தரி எனும் நாடக நிகழ்ச்சி நடக்கிறது. கோவில் கமிட்டி மற்றும் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.