மேலும் செய்திகள்
அணைகள் நீர்மட்டம்
1 minutes ago
பராமரிப்பு பணிக்காக பைக்காரா அருவி மூடல்
4 minutes ago
யானையிடம் உயிர் தப்பியவர் கால் முறிவு
5 minutes ago
ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் துவக்கம்
52 minutes ago
ஊட்டி: ஊட்டி அடுத்த அப்பர்பவானி வனப்பகுதியில் கடந்த, 2017ம் ஆண்டு வனத்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு கேமரா திருடப்பட்டிருந்தது. மேலும், 3 கண்காணிப்பு கேமராக்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதுகுறித்து வனத்துறை அளித்த புகாரின்பேரில் மஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வனப்பகுதியில் இருந்த மற்ற கண்காணிப்பு கேமராக்களில் ஆய்வு செய்தனர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த நக்சல்கள் சந்தோஷ், சோமன், விக்ரம் கவுடா, மணிவாசகம் ஆகிய, 4 பேர் வனப்பகுதிக்குள் புகுந்து ஒரு கேமராவை திருடி, மற்றவைகளை சேதப்படுத்தி சென்றதாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், சந்தோஷ், சோமன் ஆகியோரை ஏற்கனவே மற்றொரு வழக்கில் கேரள நக்சல் தடுப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். அதில், சோமன் ஊட்டி கோர்டுக்கு விசாரணைக்காக, நேற்று அழைத்து வரப்பட்டார். முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது, நக்சல் சோமன் வாகனத்தில் இருந்து இறங்கியவுடன், 'மாநில முதல்வர் ஸ்டாலின் பாசிசத்துக்கு எதிராக பேசினாலும், செயலில் ஏதும் இல்லை,' என, பேசியபடி சென்றார். அவரை, போலீசார் குடும்ப நல நீதிபதி லிங்கம் முன்பு ஆஜர்படுத்தினர். அப்போது, 'விசாரணைகாக, மூன்று நாட்கள் காவலில் எடுத்து சோமனை விசாரிக்க வேண்டும்,' என, போலீசார் அனுமதி கேட்டனர். அதன் அடிப்படையில், இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து, 19ம் தேதி மாலை 5:00 மணிக்கு சோமனை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
1 minutes ago
4 minutes ago
5 minutes ago
52 minutes ago