உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  பந்தலுாரில் தேர்தல் சிறப்பு முகாம் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்

 பந்தலுாரில் தேர்தல் சிறப்பு முகாம் பங்கேற்ற புதிய வாக்காளர்கள்

பந்தலுார்: பந்தலுார் பகுதியில் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விண்ணப்பித்தனர். தேர்தல் ஆணையம் மூலம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த விண்ணப்பங்கள் வழங்கி, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளது. இதற்காக, இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டு, விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம்கள் நடந்தது. பந்தலுார் ஓட்டுச்சாவடி மையங்களில், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த சிறப்பு முகாம்களில், புதிய வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று , விண்ணப்பங்கள் வழங்கினர். முகாமில் தாசில்தார் சிராஜுநிஷா, வருவாய் ஆய்வாளர் சிவகுமார், வி.ஏ.ஓ. மாரிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய வாக்காளர்களிடம், பெயர் பதிவு செய்வதன் அவசியம் மற்றும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி