மேலும் செய்திகள்
அபாயத்தில் வாட்டர் ஏ.டி.எம்.,:பொதுமக்கள் அச்சம்
07-Nov-2025
டி.என்.43 அஷ்ரப் குழு சங்கமம் நிகழ்ச்சி
07-Nov-2025
பூங்காவில் காய்ந்த மலர்கள்
07-Nov-2025
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
07-Nov-2025
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை சார்பில், 414 பள்ளிகளில், 'எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி' சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு அரசு, பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள், தன் சுத்தம், பள்ளி வளாக துாய்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவுநீர் பிளாஸ்டிக் ஒழிப்பு, மறுசுழற்சி மேலாண்மை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து, ஏற்படுத்தும் வகையில், 'எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.'ஊட்டி வட்டத்தில், 138 துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள்; குன்னுார் வட்டத்தில், 61; கோத்தகிரி வட்டத்தில், 65; கூடலுார் வட்டத்தில், 150 பள்ளிகள்,' என, மாவட்டம் முழுவதும் மொத்தம், 414 பள்ளிகளில், இரண்டு நாட்கள் சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி இன்று நிறைவடைகிறது.
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025
07-Nov-2025