உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி தொகை குன்னுாரில் கையெழுத்து இயக்கம்

 ஆட்டோ டிரைவர்களுக்கு உதவி தொகை குன்னுாரில் கையெழுத்து இயக்கம்

குன்னுார்: ஆந்திர மாநிலத்தை போன்று, தமிழகத்திலும் ஆட்டோ டிரைவர்களுக்கு, 15,000 ஆண்டு உதவித்தொகை வழங்க கோரி, குன்னுாரில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. குன்னுார் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பில், ஆந்திராவை போல் தமிழகத்திலும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு 15,000 ஆண்டு உதவித் தொகை வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ஹரிஹரன், பொறுப்பாளர்கள் மணி, சிவாஜி, சிலம்பரசன், சவுந்தரராஜன், முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் கூறுகையில்,'ஆட்டோ வாங்கி சுய தொழில் மேற்கொள்ளும் ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் காஸ் விலை பல மடங்கு உயர்வு, ஓலா, உபர், ராபிட்டோ, பைக் டாக்ஸி போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா போல, தமிழகத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு, வருடாந்திர உதவித்தொகை, 15 ஆயிரம் ரூபாய் வழங்க கோரி, கையெழுத்து இயக்கம் நடத்தி முதல்வருக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை