மேலும் செய்திகள்
யானை தாக்கி தொழிலாளி பலி
14 hour(s) ago
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி கடை சேதம்
30-Sep-2025
மனைவியை கொலை செய்த வடமாநில தொழிலாளி கைது
30-Sep-2025
கூடலுார்:கூடலுார் அருகே, 800 கிலோ பாக்கு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.கூடலுார் இரண்டாவது மைல் பகுதியில் உள்ள, தனியார் எஸ்டேட்டில் உள்ள பாக்கு மரங்களிலிருந்த, 800 கிலோ பாக்குகளை கடந்த மாதம் திருடி சென்றுள்ளனர்.எஸ்டேட் மேலாளர் பால்ராஜ், 59, கூடலுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கோழிக்கோடு சாலை இரும்புபாலம் பகுதியில், எஸ்.எஸ்.ஐ.,க்கள் பாக்கியநாதன், இப்ராகிம் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அவ்வழியாக வந்த 'பிக்-அப்' வாகனத்தை நிறுத்தி, சோதனை செய்தபோது அதில், 800 கிலோ பாக்கு ஏற்றி வருவது தெரியவந்தது. விசாரணையில் அவை இரண்டாவது மைல் தனியார் தோட்டத்தில், திருடப்பட்டது என்பது தெரிந்தது. வாகனத்துடன் பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், பந்தலுார் அம்மன் காவு பகுதியை சேர்ந்த விஜயகுமார், 44, ஜெயபிரகாஷ், 49, ஆகியோரை கைது செய்தனர்.
14 hour(s) ago
30-Sep-2025
30-Sep-2025