உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி

லாரி மோதி நிழல்குடை சேதம்; சீரமைக்காததால் அதிருப்தி

கூடலுார் : கூடலுார், நாடுகாணி பொன்னுார் கிராம மக்கள், காத்திருந்து பஸ் ஏறி பயணிக்க வசதியாக, கோழிக்கோடு சாலையை ஒட்டி நிழல் குடை அமைத்திருந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் மாதம், அவ்வழியாக சென்ற லாரி மோதி நிழல்குடை சேதமடைந்தது. பருவமழை காலங்களில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.எட்டு மாதங்கள் ஆகியும் நிழற்குடை சீரமைக்க இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், திறந்தவெளியில் காத்திருந்து பஸ் ஏறி பயணிக்கும் நிலை தொடர்கிறது. கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மக்கள் கூறுகையில், 'கூடலுாரில் நடப்பு ஆண்டு கோடை சீசன் முடிந்து ஜூன் மாதம், பருவமழை துவங்கிவிடும். இப்பகுதியில் சேதமடைந்த நிழல் குடை சீரமைக்காததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மக்கள் பஸ்சை எதிர்பார்த்து திறந்த வெளியில், காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அப்பகுதியில் புதிய நிழல் குடை அமைக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை