உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்

அகற்றப்படாத காய்ந்த இலைகள் வனத்தீ ஏற்படும் அபாயம்

குன்னுார்;குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில் இலைகள் உதிர்ந்து வனத்தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பனிபொழிவு மற்றும் கடும் வெயிலால் இலைகள் உதிர்ந்தும், செடிகள் காய்ந்தும் வருகிறது. குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் அதிகளவில் இலைகள் உதிர்ந்து காய்ந்த நிலையில் உள்ளது. சுற்றுலா பயணிகள் வீசும் சிகரெட் துண்டுகளால் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது. பர்லியார், வண்டிச்சோலை பஞ்சாயத்துக்கள், குன்னுார் நகராட்சி, நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறை இணைந்து, துாய்மை பணிகளை மேற்கொண்டு, இவற்றை அகற்றி தீத்தடுப்பு கோடுகளை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை