உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்

போக்சோ வழக்கில் பள்ளி செயலருக்கு 4 நாள் காவல்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி உள்ளது. இங்கு பயிலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பள்ளி செயலர் தசரதபூபதி, 55, என்பவரை, போலீசார் தேடி வந்தனர். ராமநாதபுரம் அரண்மனை வடக்கு ரத வீதியைச் சேர்ந்த இவர், கடந்த 16ல் ராமநாதபுரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.அவரை போலீஸ் காவலில் விசாரிக்க மகளிர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். விசாரித்த நீதிபதி கோபிநாத், நான்கு நாட்கள் போலீஸ் காவலில் அவரை வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி, நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை