உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

கீழக்கரையில் நாய்கள் தொல்லை அதிகரிப்பு

கீழக்கரை : கீழக்கரை நகராட்சி பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட், கடற்கரை பகுதி, பஜார், வள்ளல் சீதக்காதி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் கூட்டமாக திரியும் வெறி நாய்கள் அப்பகுதியில் செல்வோரை விரட்டி கடிக்கின்றன.பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது: உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வெறி நாய்களால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கூட்டமாக ஒன்றோடொன்று சண்டையிடும் நாய்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரங்களில் கொட்டப்படும் குப்பையை கிளறும் நாய்கள் அவ்வழியாக செல்வோரை துரத்தி கடிக்கின்றன.எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடிப்பதற்கு தனியார் மூலம் நடவடிக்கை எடுத்து நாய்களின் தொல்லையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி