உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிணற்றில் கிடந்த பெண் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு

கிணற்றில் கிடந்த பெண் உடல் அடையாளம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அருகேயுள்ள சக்கரக்கோட்டை கண்மாய் முனீஸ்வரன் கோயில் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பெரிய கிணற்றில் 60 வயது மதிக்க தக்க பெண் உடல் மீட்கப்பட்டது. இவர் யார் என கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். அந்த பெண் வைத்திருந்த பர்சில் தர்மாபுரி என எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து தர்மபுரி மாவட்ட போலீசாரிடம் தொடர்பு கொண்டு பெண்ணின் படத்தினை வழங்கினர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சீனிவாசன் மனைவி விஜயா 61, இவர் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் ஆவார். விஜயா உடல் நிலை பாதிக்கப்பட்டு மனம் வெறுத்த நிலையில் ராமேஸ்வரம் வந்தவர் சக்கரக்கோட்டை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இவரது உடலை மகள் சங்கீதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி