| ADDED : மார் 28, 2024 10:51 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் சுற்றுப்பகுதியில் மா சீசன் அடுத்த மாதம் துவங்கஉள்ள நிலையில் தற்போது வரத்து குறைவால் கிலோ ரூ.100க்கும், காய் ரூ.70 முதல் ரூ.80க்கு விற்கப்படுகிறது.ராமநாதபுரம், ரெகுநாதபுரம், சக்கரகோட்டை, பெரியபட்டினம், பட்டணம்காத்தான், தேவிபட்டினம், கீழக்கரை ரோடு, திருப்புல்லாணி உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி செய்துள்ளனர்.ஏப்., மே, ஜூன் வரை மாம்பழம் விற்பனை நடக்கிறது.தற்போதுமா விளைச்சல் துவங்கியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்,மதுரையில் இருந்து சந்தைக்கு மாங்காய், மாம்பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பாலாமணி கிலோ ரூ.80,செந்துாரம் ரூ.100க்கு விற்கப்படுகிறது. மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் கூறினர்.