உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பனில்  தொடர் விபத்துக்கள் ஏற்படுவதால்  வாரச்சந்தையில் அடிப்படை வசதி கோரி   மனு

பாம்பனில்  தொடர் விபத்துக்கள் ஏற்படுவதால்  வாரச்சந்தையில் அடிப்படை வசதி கோரி   மனு

ராமநாதபுரம்: பாம்பன் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் வாரச்சந்தையால் விபத்துக்கள் ஏற்படுவதால் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.பாம்பன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வாரச் சந்தை நடக்கிறது. இங்கு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்துக்கள் நடக்கிறது. ஜூலை 28ல் நடந்த விபத்தில் தாய், மகள், இளைஞர் ஒருவர் என டூவீலர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலியாகினர்.இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா வரும் பயணிகளும் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பொதுச் சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.வாரச் சந்தை நடப்பதை மாலை 5:00 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 200 மீ.,ல் சந்தை இருக்க வேண்டும். சந்தை நடைபெறும் இடத்தை சுற்றிலும் கட்டாயம் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்தம் இருக்க வேண்டும். சந்ததை நடக்கும் இடத்தை சுற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குறைந்த பட்சம் 5 இடங்களில் அமைக்க வேண்டும். ஐந்து இடங்களில் கழிப்பறை வசதியும் செய்து தர வேண்டும். இது போன்ற அடிப்படை வசதிகளை செய்த பின் ஊராட்சியில் இருந்து வரிவசூல் செய்து சந்தையை நடத்த வேண்டும். அதுவரை தற்காலிகமாக சந்தையை நடத்த வேண்டாம் என பொதுமக்கள் தரப்பில்ஊராட்சி தலைவி அகிலா பேட்ரிக் இடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ