உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அதிகரிக்க திட்டம்

பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை அதிகரிக்க திட்டம்

திருவாடானை, : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை மேலும் பல கிராமங்களில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கும் வகையில் அனைத்து வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது சங்கங்கள் இல்லாத பகுதிகளில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து பால் உற்பத்தி கூட்டுறவு சங்க சார்பதிவாளர் அண்ணாமலை கூறியதாவது:சங்கங்கள் இல்லாத பகுதிகளை ஆய்வு செய்து அங்கு புதிதாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் எட்டு கிராமங்களில் ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது. தற்போது ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கூடலுார், வடக்கலுார், ஆனந்துார், கோவிந்தமங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சங்கம் பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.புதிய சங்கங்களுக்கு கறவை மாடுகளுக்கான கடன் வழங்கும் முகாம்கள் நடத்தி கடன் வழங்கும் பணிகளும் நடக்கிறது. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 1446 பேருக்கு ரூ.1 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் விவசாயப் பணிகளில் முழுமையாக கவனத்தை செலுத்தி விடுவதால் மாடு வளர்ப்பில் கவனக்குறைவாக உள்ளனர். இருந்த போதும் மாடுகள் வளர்ப்பின் அவசியம், அரசின் நலத்திட்ட பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி