உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டூவீலரில் கஞ்சா இருவர் கைது

டூவீலரில் கஞ்சா இருவர் கைது

ராமநாதபுரம், : தங்கச்சிமடம் பகுதியில் டூவீலரில் கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.தங்கச்சிமடம் இன்ஸ்பெக்டர் ராஜா யாகப்பா பஸ்ஸ்டாப்பில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது டூவீலரில் வந்த பாம்பன் பட்டாள தெரு அடைக்கலம் மகன் தினேஷ்குமார் 44, துாத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் ராஜாங்கம் மகன் அந்தோணி செலஸ்டினை 35, சோதனை செய்தனர்.அப்போது டூவீலரில் 2 கிலோ 850 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்து கஞ்சா, ரூ.8000 பணம், 2 அலைபேசிகள், டூவீலரை பறிமுதல் செய்து தங்கச்சிமடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை