உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இன்ஸ்டாகிராமில் பழகி சுற்றுலா வந்த திருப்பூர் இளம்பெண் பலி

இன்ஸ்டாகிராமில் பழகி சுற்றுலா வந்த திருப்பூர் இளம்பெண் பலி

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி அவரை தேடி சுற்றுலாவாக வந்த திருப்பூர் இளம்பெண் பஸ் மோதி பலியானார். மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீமதிகாவியா 14. இவர் சுந்தரமுடையான் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார். இவருடன் திருப்பூரை சேர்ந்த மித்ரா 20, இன்ஸ்டாகிராமில் தோழியாக பழகி வந்தார்.இருவரும் சந்திக்க விரும்பிய நிலையில் மித்ரா சுற்றுலாவாக இரு தினங்களுக்கு முன் திருப்பூரில் இருந்து அரியமானுக்கு வந்தார். சுற்றுலாப் பகுதிகளை சுற்றிப்பார்த்த இருவரும் நேற்று காலை உறவினரின் டூவீலரில் ராமநாதபுரம் வந்தனர்.மதியம் மீண்டும் அரியமான் சென்றனர். மித்ரா டூவீலரை ஓட்டினார். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சேர்வைக்காரன் ஊருணி பஸ்ஸ்டாப் அருகில் மதியம் 2:00 மணிக்கு சென்ற போது எதிரில் ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த அரசு பஸ் மோதியது.இதில் மித்ரா சம்பவ இடத்தில் பலியானார். ஸ்ரீமதி காவியா படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை