உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூவேந்தியநாதர் கோயிலுக்கு பஸ் சேவை பக்தர்கள் கோரிக்கை

பூவேந்தியநாதர் கோயிலுக்கு பஸ் சேவை பக்தர்கள் கோரிக்கை

சாயல்குடி, : ராமநாதபுரத்தில் இருந்து 60 கி.மீ., தொலைவில் உள்ள மாரியூர் பூவேந்திய நாதர் கோயிலுக்கு, திருப்புல்லாணி வழியாக பஸ் வசதி வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.வருண பகவானால்பூஜிக்கப்பட்ட சிவாலயமாக மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வள்ளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இதன் அருகே ஒரு கி.மீ., தொலைவில் எழில் மிகுந்த மன்னர் வளைகுடா கடற்கரை அமைந்துள்ளது.ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மாரியூர் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்க வேண்டும்.இதுகுறித்துமாரியூர் பூவேந்தியநாதர் கோயில் பேஷ்கார் சீனிவாசன் கூறியதாவது: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, கொத்தங்குளம் சுந்தர்ராஜ பெருமாள் கோயில், வாலிநோக்கம் வழியாக மாரியூருக்கு பஸ் இயக்க வேண்டும். இதன் மூலம் அரசுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது.ராமநாதபுரத்தில் இருந்து நேரடியாக மாரியூருக்கு பஸ் வசதி கிடைத்தால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை