உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

 மாயாகுளம் செங்காட்டுடைய அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம்

கீழக்கரை: -: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சிக்குட்பட்ட தச்சன் ஊருணி அருகே பழமை வாய்ந்த செங்காட்டுடைய அய்யனார் கோயில் உள்ளது. இங்கு புதியதாக திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நவ., 28 அன்று முதல் கால யாகசாலையுடன் விழா துவங்கியது. ராமேஸ்வரம், தேவிபட்டினம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை ஆகிய இடங்களில் இருந்து புனித தீர்த்தநீர் கொண்டுவரப்பட்டது. நேற்று யாகசாலை பூஜைகளுடன் காலை 11:00 மணிக்கு செங்காட்டுடைய அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்களுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் மற்றும் ஆன்மிக பாடல் கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை நட்டாத்தி சத்திரிய ஹிந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அனைத்து கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குழுவினர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை