மேலும் செய்திகள்
கோயில் உண்டியல் உடைப்பு
2 minutes ago
அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு
2 minutes ago
தற்கொலை
3 minutes ago
திருவாடானை: மின்வாரிய அலுவலகத்தில் நெட்வொர்க் பிரச்னையால் புதிய மின் மீட்டர் இணைப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திருவாடானையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு சில நாட்களுக்கு முன்பு புதிய மின் மீட்டர்கள் வந்துள்ளன. ஆனால் அந்த மின் மீட்டர்களை நெட்வொர்க் பிரச்னையால் பதிவேற்றம் செய்யமுடியாததால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் கூறியதாவது-திருவாடானையில் ஏராளமானோர் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து அதற்கான டெபாசிட் தொகையை செலுத்தி பல மாதங்களாக காத்திருந்தோம். சில நாட்களுக்கு முன்பு புதிய மின் மீட்டர்கள் வந்துள்ளன. ஆனால் இணைப்பு கொடுக்காததால் புதிய வீடு கட்டுவோர் பாதிக்கபட்டுள்ளனர். புதிய வீடு கட்ட வங்கி கடன் தொகை பெற்ற நிலையில் மின் மீட்டர் பிரச்னையால் கட்டுமான பணிகளை துவக்க முடியாமல் உள்ளது என்றனர். திருவாடானை மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது- மூன்று நாட்களாக நெட்வொர்க் பிரச்னையால் புதிய மின்மீட்டர்களை ஆன்-லைனில் பதிவு செய்யமுடியாமல் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் சரி செய்யபட்டு மின் மீட்டர்கள் வழங்கப்படும் என்றார்.
2 minutes ago
2 minutes ago
3 minutes ago