உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதி அருகே கோஷ்டி மோதலால் கலவரம் இரண்டு மாவட்ட போலீசார் குவிப்பு

கமுதி அருகே கோஷ்டி மோதலால் கலவரம் இரண்டு மாவட்ட போலீசார் குவிப்பு

கமுதி:கமுதி அருகே மீட்டான்குளத்தில் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவத்தால், இரண்டு கோஷ்டியினர் மோதி கொண்டதில் பெரும் கலவரம் ஏற்பட்டு 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிராமத்தில் ஏற்பட்ட பதட்ட நிலையால் இரண்டு மாவட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் வல்லந்தை ஊராட்சியை சேர்ந்த மீட்டான்குளம். இக்கிராமத்தை சேர்ந்த ராஜகோபால்,57, வார்டு உறுப்பினராக உள்ளார். இவர் கோயில் வரவு செலவு கணக்கு கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இவருடன் சேர்த்து 12 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளனர். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜகோபால் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கிராமத்தில் குடிநீர் தொட்டியில், குடிநீர் பிடிக்க சென்றபோது மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது. இருதரப்பினரும் ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில், வார்டு உறுப்பினர் ராஜகோபால் மற்றும் பெண்கள் உட்பட 18 பேர் காயமடைந்து, கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராஜகோபால் தரப்பில் பஞ்சவர்ணம் புகாரின்படி, பெத்துக்காளை, தவமணி, முத்துராஜ் உட்பட 18பேர் மீதும், தவமணி புகாரின்படி ராஜகோபால், காட்டுராஜா, அமுதா உட்பட 15பேர் மீதும் மண்டலமாணிக்கம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். மீட்டான்குளத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்பிற்கு ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை