மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
பரமக்குடி ; பரமக்குடி நகராட்சி சின்ன கடை தெருவில் வாறுகால் சுத்தம் செய்யாமல் உள்ளதால் கழிவுநீர் வீடுகள் மற்றும் கடைகளில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது.பரமக்குடி கவுரி அம்மன் கோவில் தெரு, இரட்டைப் பிள்ளையார் கோவில் தெரு, ராஜ வீதி மற்றும் 5 க்கும் மேற்பட்ட தெருக்களில் இருந்து கழிவு நீர் சின்னக்கடை பகுதி வாறுகாலில் செல்கிறது. தொடர்ந்து மதுரை -மண்டபம் ரோடு வழியாக சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி முன்பு பிரிந்து வைகை ஆற்றை நோக்கி செல்லும்.இந்நிலையில் சின்ன கடை தெருவை சுற்றிலும் வீடு மற்றும் கடைகள் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவையாக உள்ளது. இங்குள்ள வாறுகால் மீது தெருவோர கடைகள் கட்டியுள்ளனர்.மேலும் பல மாதங்களாக வாறுகால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் வீடு கட்டும் போது இடிக்கும் மணல், கற்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என அடர்ந்து கிடக்கிறது. இதனால் வீடுகளில் பயன்படுத்திய தண்ணீர் கழிவுகள் வெளியேற முடியாமல் நிற்கிறது.இதையடுத்து வீட்டு உரிமையாளர்களே அருகில் உள்ள வாறுகால்களில் இறங்கி சுத்தம் செய்யும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. மேலும் மழை நேரங்களில் ஒட்டுமொத்த தெருவிலும் 2 அடி தண்ணீர் தேங்கி நிற்கும் அவல நிலை உள்ளது.எனவே இப்பகுதி வாறுகால்கள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago