| ADDED : மார் 22, 2024 01:37 AM
சேலம்;லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தலைமை வகித்தார்.அதில் சேலம் தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் ராஜிவ் சங்கர் கிட்டூர், கள்ளக்குறிச்சி தொகுதி பார்வையாளர் மனோஜ்குமார் சர்மா பேசியதாவது:பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் உள்ளிட்ட குழுவினர் தொடர்ந்து ஆய்வு, கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.வாகனங்களை முழுமையாக சோதனையிட வேண்டும். முக்கிய தேர்தல் பிரசார கூட்டங்கள், வேட்பாளர்களின் பிரசாரங்கள் ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும்.வாகன சோதனையில் ஆவணங்களின்றி பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்தால், விபரங்களை உடனுக்குடன் உரிய அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும். தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக பின்பற்றி ஆய்வு, கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, எஸ்.பி., அருண்கபிலன், டி.ஆர்.ஓ., மேனகா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பல்வேறு குழுக்களின் அலுவலர்கள் பங்கேற்றனர்.