| ADDED : ஆக 10, 2024 07:37 AM
சேலம்: பிறந்து, 5 நாட்கள் ஆன ஆண் குழந்தையை, அவரது பாட்டியிட-மிருந்து நுாதனமாக வாங்கிய மர்ம பெண், சேலம் அரசு மருத்து-வமனையில் இருந்து கடத்திச்சென்றார்.நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த தங்கதுரை, ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி வெண்ணிலா, 26. இவர்களுக்கு, 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கர்ப்பமான வெண்ணிலா, கடந்த, 5ல் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்-தது. வெண்ணிலாவுடன், அவரது மாமியார் இந்திரா உடனிருந்து வந்தார்.நேற்று மதியம், வெண்ணிலா சிகிச்சை பெற்று வந்த பிரிவுக்கு, ஒரு மர்ம பெண் வந்தார். அவர், அழகாக இருப்பதாக கூறி குழந்-தையை எடுத்து கொஞ்சினார். தொடர்ந்து கண்கள் மஞ்சளாக உள்ளதால் காமாலை தொற்று இருக்கலாம் என கூறி, மருத்துவ-ரிடம் சொல்ல அழைத்துள்ளார்.இதனால் இந்திராவும், அந்த மர்ம பெண்ணும், மருத்துவரிடம் சென்று குழந்தையை பரிசோதித்தனர். தொடர்ந்து மருத்துவர், மருந்து எழுதி கொடுத்தார். இதனால் அந்த பெண், இந்திரா-விடம், 'நீங்கள் மருந்து வாங்கி வாருங்கள். நான் குழந்தையுடன் இங்கேயே நிற்கிறேன்' என கூறினார்.அதன்படி இந்திரா சென்றார். மருந்து வாங்கிக்கொண்டு திரும்பி வந்தபோது குழந்தையுடன் அந்த பெண்ணை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இந்திரா, அங்குள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்தார். பின் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்-சிகளை பார்த்தபோது, அதில் குழந்தையுடன் பெண் தப்பிய காட்-சிகள் இருந்தன. அதை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.