உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

கட்டடத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

சேலம், : இரும்பாலை அருகே எம்.கொல்லப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்-தவர் சுரேந்திரபாபு, 24. கட்டட தொழிலாளியான இவர், கடந்த மாதம், 20ல் அதே பகுதியில் உள்ள புருஷோத்தம்மன் என்ப-வரின் வீடு கட்டுமானப்பணிக்கு சென்றார். அப்போது, 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். அதில் படுகாயம் அடைந்த அவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை, தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்து-வமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த, 29ல் சேலம் அரசு மருத்து-வமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் உயிரி-ழந்தார். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ