உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு

12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவிப்பு

சேலம் : தமிழ்நாடு பிராமணர் சங்க, சேலம் மாவட்ட கிளை சார்பில், 12 சிறுவர்களுக்கு பூணுால் அணிவித்தல் விழா சேலம், மரவனேரி, காஞ்சி காமகோடி சங்கர மடத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சாஸ்திர சம்பிரதாயப்-படி பூணுால் பூணும் சிறுவர்களின் குடும்பத்துக்கு பட்டு வேட்டி, புடவை, சீர் பட்சணங்கள், தாம்பூலம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. சுகவனம் சாஸ்திரிகள் குழுவினர், வைதீக முறைப்படி பிரம்மோபதேஸம் செய்து, சிறுவர்களுக்கு பூணுால் அணிவித்தனர். மாவட்ட பொருளாளர் பஞ்சநாதன், இளைஞ-ரணி செயலர் ராஜேஷ், மகளிரணி செயலர் நாகலட்சுமி, மாவட்ட அமைப்பு செயலர் ராமு உள்பட, மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை