உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீட்டுமனை பட்டா கேட்டு ஆதார் ஒப்படைக்க வந்த மக்கள்

வீட்டுமனை பட்டா கேட்டு ஆதார் ஒப்படைக்க வந்த மக்கள்

சேலம்: கெங்கவல்லி அருகே கூடமலையை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட-வர்கள் நேற்று காலை, சேலம் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அதிகாரிகளை சந்திக்க ஐந்து பேர் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என போலீசார் கூறினர்.அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் தங்களுடன் எடுத்து வந்திருந்த ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய-வற்றை அதிகாரிகளிடம் ஒப்படைக்கிறோம் என தெரிவித்து அடையாள அட்டைகளை துாக்கி காண்பித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.இதுகு-றித்து பொதுமக்கள் கூறுகையில்,'கூடமலை பகுதியில், 70 ஆண்-டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் 58 குடும்பங்களுக்கு பட்டா இல்லை. பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளோம். எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை-களை அதிகாரிகளிடம் வழங்க வந்திருக்கிறோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ