உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 தரப்பினர் மோதல் பொய் வழக்கு போடுவதாக ஒரு தரப்பு சாலை மறியல்

2 தரப்பினர் மோதல் பொய் வழக்கு போடுவதாக ஒரு தரப்பு சாலை மறியல்

கெங்கவல்லி, கெங்கவல்லியில் உள்ள 'டாஸ்மாக்' கடை அருகே பார் உள்ளது. அதை சங்ககிரியை சேர்ந்த சென்னகிருஷ்ணன் உரிமம் பெற்று நடத்துகிறார். கடந்த, 20ல், பாரில் பணிபுரியும் சிலம்பரசனிடம், கெங்கவல்லியை சேர்ந்த சக்திவேல், தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு புகாரில், 8 பேரை கைது செய்த போலீசார், மேலும், 20 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.இந்நிலையில் போலீசார் பொய் வழக்கு போடுவதாக ஒருதரப்பினர் கூறி, நேற்று மதியம், 3:00 மணிக்கு, ஆத்துார் - கெங்கவல்லி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் பேச்சு நடத்தினார். அப்போது அவர்கள், 'ஒரு சிலருக்கு ஒட்டுமொத்த சமுதாயத்தை தவறான வழியில் நடத்துகிறீர்கள். எங்கள் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்' என்றனர்.டி.எஸ்.பி., 'போலீஸ் ஸ்டேஷன் முன், 'சிசிடிவி'யில் பதிவான காட்சிகளின்படி காரை சேதப்படுத்தியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் இல்லாதவர்கள் மீது வழக்கு இருந்தால் விசாரித்து பெயர் நீக்கப்படும்' என உறுதி அளித்தார். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக, கடந்த, 21ல் நடந்த மோதலில், 3 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை