உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை

விவசாயி அடித்துக்கொலை கும்பலுக்கு வலை

சேலம்: சேலம், வீராணம் அடுத்த பள்ளிப்பட்டி, ஏரிக்காட்டை சேர்ந்த விவசாயி மாணிக்கம், 49. இவர் கிணற்றில் துார்வாரும் கிரேனை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். பள்ளிப்பட்டியில் விவசாயி அண்ணாதுரைக்கு சொந்தமான கிணற்றில் நேற்று துார்வாரும் பணியில் ஈடுபட்டார்.அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த, 5 பேர், ஒரு லட்சம் ரூபாய் கடனை திருப்பி கேட்டு, மாணிக்கத்திடம், தகராறு செய்துள்ளனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த கும்பலை சேர்ந்தவர்கள், உருட்டுக்கட்டையால் மாணிக்கம் தலையில் பலமாக தாக்கினர். அதில் பலத்த அடிபட்டு மாணிக்கம் இறந்துவிட்டார். வீராணம் போலீசார் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து மாணிக்கத்தின் மொபைல் அழைப்பை வைத்து கொலையாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை