| ADDED : ஆக 11, 2024 02:37 AM
சேலம்: கெங்கவல்லி அருகே மகாலட்சுமி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. அதன் சேவையை விரிவுபடுத்த, 74 கிருஷ்ணாபுரத்தில் புது கிளை தொடங்கப்பட்டது. அதேபோல் ஆத்துார் அடுத்த புங்கவாடி புதுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க கிளை பைத்துாரிலும், ஜலகண்டாபுரம் அருகே தோர-மங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கிளை காப்பரத்-தான்பட்டியிலும், சங்ககிரி அருகே திருவாண்டிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கிளை பால்மடையிலும் தொடங்கப்-பட்டது.சேலம் போஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில், அந்த, 4 கிளை கூட்டுறவு சங்கங்கள் தொடங்கியதற்கான சான்றிதழை அமைச்சர் நேரு வழங்கினார். அதை, சம்பந்தப்பட்ட சங்க உறுப்பினர்கள் அடுத்த-டுத்து பெற்றுக்கொண்டனர்.