உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / புழுதி பறக்கும் சர்வீஸ் சாலை தவறி விழும் வாகன ஓட்டிகள்

புழுதி பறக்கும் சர்வீஸ் சாலை தவறி விழும் வாகன ஓட்டிகள்

பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பனமரத்துப்பட்டி பிரிவு சாலை உள்ளது. அப்பகுதியில் பாலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் சாலையில் மண் குவிந்து கிடக்கிறது.பவுடர் போல் மிகவும் நைசாக மண் உள்ளதால் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் சென்றால் புழுதி எழும்பி புகை மண்டலம் போல் காட்சியளிக்கிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலையே தெரிவதில்லை. பைக் சக்கரம் மண்ணில் புதைந்து கொள்வதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுகின்றனர்.வெயில் நேரத்தில் புகை மண்டலத்தால் குழந்தைகள், முதியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சர்வீஸ் சாலையிலுள்ள மண்ணை அகற்ற வேண்டும். மேலும் சாலையில் மண் பரவுவதை தடுக்கும்படி, மாற்று வழிமுறைகளை நடைமுறைப்படுத்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை