உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காவிரி கரையோர குடிநீரேற்று நிலையங்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய தீவிரம்

காவிரி கரையோர குடிநீரேற்று நிலையங்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய தீவிரம்

மேட்டூர்: காவிரியில் தேக்கிய நீர், கீழ் பகுதிக்கு வெளியேற்றியதால் குடிநீரேற்று நிலையங்கள் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.மேட்டூர், தொட்டில்பட்டி காவிரியாற்றில் இருந்து அனல்மின் நிலையங்களுக்கு தினமும், 30 கனஅடி நீர் எடுக்கப்படுகிறது. காவிரியாற்றில் தினமும், சேலம் மாநகராட்சிக்கு, 15.5 கோடி லிட்டர், வேலுார் மாநகராட்சி, வழியிடை கிராமங்களுக்கு, 21.5 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது.தவிர மேட்டூர் நகராட்சிக்கு, 75 லட்சம், ஆத்துார், வழியிடை கிராமங்களுக்கு, 74 லட்சம், கொளத்துார் டவுன்பஞ்.,க்கு, 15 லட்சம், கொளத்துார் ஒன்றியத்துக்கு, 54 லட்சம் லிட்டர் தண்ணீர் காவிரியில் எடுத்து சுத்திகரித்து மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மேலும் காடையாம்பட்டிக்கு, 26 லட்சம், பி.என்.பட்டி, வீரக்கல்புதுார் டவுன்பஞ்.,க்கு, 80 லட்சம், நங்கவள்ளி ஒன்றியம் வழியிடை கிராமத்துக்கு தினமும், 18 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுத்து சுத்திகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. சேலம் மாநகராட்சி உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வசிக்கும் மக்கள், மேட்டூர் காவிரி நீரையே நம்பியுள்ளனர். செக்கானுார் கதவணை மின் நிலைய பராமரிப்பு பணி நேற்று துவங்கியது.அதற்காக காவிரியில் தேக்கி வைத்திருந்த நீர் கீழ் பகுதிக்கு திறக்கப்பட்டதால், குடிநீர் எடுக்கும் நிலையங்களில் தண்ணீர் உறிஞ்சும் பகுதிக்கு, காவிரி நீர் செல்வதற்காக அந்த பகுதிகளை ஆழப்படுத்தும் பணியில் குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை