உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கார் கவிழ்ந்து மின் ஊழியர் பலி

கார் கவிழ்ந்து மின் ஊழியர் பலி

பெத்தநாயக்கன்பாளையம்: நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன், 45. மின்வாரி-யத்தில் லாரி டிரைவராக பணிபுரிகிறார். அப்பமசமுத்திரத்தை சேர்ந்தவர் செந்தில், 41. ஆத்துாரில் மின்வாரிய, ஸ்டோர் ரூமில் ஏற்றுமதி, இறக்குமதி ஊழியராக பணிபுரிந்தார்.இருவரும் நேற்று மதியம், 3:30 மணிக்கு, ஆத்துாரில் இருந்து வாழப்பாடி நோக்கி, 'ஸ்விப்ட்' காரில் சென்றுகொண்டிருந்தனர். மணிவண்ணன் ஓட்டினார்.புத்திரகவுண்டன்பாளையம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், புறவழிச்சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்தில் செந்தில் உயிரிழந்தார். மணிவண்ணன் படுகாயம் அடைந்தார். ஏத்தாப்பூர் போலீசார், மணிவண்ணனை மீட்டு வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ