உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 77 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 77 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கல்

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில் துணைவேந்தர் ஜெகநாதனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை கண்டித்து, கடந்த, 1, 2ல் பல்கலை தொழிலாளர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர், பல்கலை நுழைவாயில் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி(பொ), பல்கலை விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விளக்கம் கேட்டு, 77 பேருக்கு நேற்று, 'நோட்டீஸ்' வழங்கியுள்ளார்.

'அடக்குமுறை'

இதையடுத்து பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் வெளியிட்ட அறிக்கை: பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகவும், துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராகவும், தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, அறவழி போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் தொழிலாளர்களை அச்சுறுத்தும்படி பொறுப்பு பதிவாளர், 'மெமோ' வழங்கியுள்ளார். இது ஜனநாயக விரோத அடக்குமுறை. சங்கம், சட்டப்படி எதிர்கொள்ளும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை