| ADDED : ஆக 18, 2024 04:25 AM
சேலம்: கிளினிக், மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சையை மருத்துவர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர்.கோல்கட்டாவில் முதுகலை மருத்துவ மாணவி, கடந்த 9ல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இதை கண்-டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், நாடு முழுதும், 24 மணி நேர பணி புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தனர். சேலம் மாவட்டத்தில், 150 மருத்துவமனைகள், 1,500 கிளினிக்குகள் உள்ளன. இவற்றில் நேற்று காலை முதல், புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. அவசரம் அல்லாத சிகிச்சைகள் வழங்-கப்படவில்லை.இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க சேலம் கிளை தலைவர் சாது பக்தசிங் கூறியதாவது: கோல்கட்டா மாணவி கொலை செய்யப்-பட்ட நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அவர்களின் பாது-காப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி, நாடு தழுவிய பணி புறக்க-ணிப்பில் ஈடுபட்டுள்ளோம். சேலம் மாவட்டத்தில், 2,500 மருத்-துவர்கள் பங்கேற்றுள்ளனர். 1,650 கிளினிக், மருத்துவமனை-களில் புற நோயாளிகள் சிகிச்சை வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.அரசு மருத்துவர் சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று காலை, 7:30 முதல், 8:30 மணி வரை, புறநோயாளிகள் சிகிச்சை பணி புறக்க-ணிப்பில் ஈடுபட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் பயிற்சி உள்ளிட்ட மருத்துவர்கள், ஒரு மணி நேரம் பணியை புறக்க-ணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் காத்திருந்-தனர்.