உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மழையால் சந்தைக்கு ஆடுகள் வரத்து சரிவு

மழையால் சந்தைக்கு ஆடுகள் வரத்து சரிவு

இடைப்பாடி : கொங்கணாபுரம் டவுன் பஞ்சாயத்து வாரச்சந்தையில் ஆட்டுச்சந்தை நேற்று கூடியது. ஆனால் சில நாட்களாக அதிகளவில் மழையால், குறைந்த அளவிலேயே ஆடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவந்தனர். கடந்த வாரம், 4,240 ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில் இந்த வாரம், 2,410 ஆடுகளையே கொண்டு வந்தனர். அதற்கேற்ப விலை அதிகரித்தது. கடந்த வாரத்தை விட, ஆடுக்கு, 1,000 ரூபாய் வரை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி, 10 கிலோ வெள்ளாடு, 7,500 முதல் 8,150 ரூபாய்; செம்மறியாடு, 7,200 முதல், 7,650 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 2.10 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !