| ADDED : ஜூன் 19, 2024 01:54 AM
சேலம், சேலம் பட்டர்பிளை மேம்பாலம் அருகில், சாக்கடையிலிருந்து அழுகிய நிலையில், வாலிபர் சடலம் மீட்கப்பட்டது.சேலம், கொண்டலாம்பட்டி அருகில் உள்ள பட்டர்பிளை மேம்பாலம் அடியில், கழிவு நீர் ஓடை உள்ளது. நேற்று காலை அந்த ஓடையில், 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் மிதந்ததை, அந்த வழியே சென்றவர்கள் பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்பு துறை மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், ஒரு மணி நேரம் வரை போராடி சடலத்தை மீட்டனர். அழுகிய நிலையில் இருந்த சடலத்தை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பெயர், ஊர் உள்ளிட்ட எவ்வித விபரமும் இல்லாத நிலையில், மது போதையில் சாக்கடையில் தவழி விழுந்துவிட்டாரா அல்லது கொலை செய்து வீசி சென்றனரா என்பது குறித்து, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.