உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

ஏசியை திருட முயன்ற வடமாநிலத்தவர் இருவர் கைது

சேலம்: தாசில்தார் வீட்டில் ஏசியை கழற்ற முயன்ற, இருவர் கைது செய்-யப்பட்டனர்.சேலம், திருவாக்கவுண்டனூர் மேத்தா நகரை சேர்ந்தவர் தயாளன். ஓய்வு பெற்ற துணை தாசில்தார். நேற்று முன்தினம் தயாளன், மகன் கவுதம் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்-போது, மதியம், 3:00 மணியளவில் வீட்டின் மொட்டை மாடி வழியாக வந்த இருவர், அங்கு பொருத்தப்பட்டிருந்த ஏசி மிஷினை கழற்ற முயன்றனர். இதை பார்த்த கவுதம், அங்கிருந்த-வர்களின் உதவியுடன் இருவரையும் பிடித்து சூரமங்கலம் போலீ-சாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சட்-டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திப்குமார் நிதின், 23, ஷ்யாம்லால், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை