உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுரை

விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுரை

சேலம்: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான, பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள எஸ்.பி.,க்களுக்கு, ஐ.ஜி., அறிவுரை வழங்கினார்.சேலம் எஸ்.பி., அலுவலகத்தில் சேலம் உள்பட நான்கு மாவட்ட எஸ்.பி.,க்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் பேசியதாவது: போலீஸ் ஸ்டேஷனில், மக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு சி.எஸ்.ஆர். வழங்க வேண்டும் அல்லது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் கொடுக்க வரும் மக்-களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். குற்றச்சம்பவங்களை தடுக்க மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்ப-டுத்த வேண்டும். ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கண்கா-ணிக்க வேண்டும். அந்த பட்டியலில் இருந்து எடுக்க கூடிய-வர்கள், சேர்க்க கூடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கஞ்சா, குட்கா, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க, அடிக்கடி ரெய்டு நடத்த வேண்டும். பிடிவாரன்ட் பிறப்பிக்கப்-பட்டு தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய வேண்டும். அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பழைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நடக்கும் ஊர்வலத்திற்காக பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை மேற்-கொள்ள வேண்டும்.இவ்வாறு பேசினார்.சேலம் டி.ஐ.ஜி., உமா, எஸ்.பி.,க்கள் சேலம்- கவுதம் கோயல், கிருஷ்ணகிரி- தங்கதுரை, நாமக்கல் -ராஜேஷ்கண்ணா, தர்மபுரி -மகேஸ்வரன் மற்றும் ஏ.டி.எஸ்.பி.,க்கள், தனிப்பிரிவு இன்ஸ்-பெக்டர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை